அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை அபிவிருத்திச்சங்கத்தின் அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும் 09.08.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கும், இங்கிலாந்து நேரப்படி பி.ப. 03.00 மணிக்கு, நோர்வே நேரப்படி பி.ப. 04.00 மணிக்கு, ரொறொன்ரோ, நியூயோர்க் நேரப்படி பகல் 10.00 மணிக்கு, துபாய் நேரப்படி பி.ப. 6.00 மணிக்கு, கன்பரா நேரப்படி இரவு 12.00 மணிக்கு Zoom செயலி ஊடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு உலகின் எந்தப்பாகத்திலிருந்தும் Zoom செயலி ஊடாக அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் படித்த, படிப்பித்த, அதன் வளர்ச்சியில் அக்கறைகொண்ட அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
கூட்டத்தில் இணையும் முறை.
தங்கள் முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை கீழே தரப்பட்ட WhatsApp இலக்கங்களுக்கு அனுப்பி கூட்டத்தில் பங்கேற்க முற்பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பின்பு கூட்டத்தில் இணைவதற்கான link ஐ மின்னஞ்சல் ஊடாக பெறுவீர்கள். அந்த உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் உள்ள link ஐ கூட்டம் ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் அழுத்தி கூட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்.
zoom.us என்ற தளத்திற்கு சென்று அதன் வலதுபக்க மேல் மூலையில் உள்ள JOIN A MEETING ஐ அழுத்தி அதில் கீழே தரப்பட்டுள்ள link ஐ பதிவுசெய்து இணைந்துகொள்ள முடியும்.
https://us02web.zoom.us/meeting/register/tZcvceisrj4tHtwoWPLcs-r5VIAByO5bnJuc
நிகழ்ச்சி நிரல்
- தற்காலிக தலைவர் திருமதி. நளாயினி குகநாதன் அவர்களின் அறிமுக உரை.
- பாடசாலை அதிபர் திரு. க. ரவிச்சந்திரன் அவர்களின் உரை.
- நோர்வேயிலிருந்து திரு. கு. தவேந்திரன் அவர்களின் உரை.
- தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தெரிவுசெய்தல்.
- அங்கத்தவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தலும் ஆராய்தலும்.
தொடர்புகளுக்கு – WhatsApp இலக்கங்கள் – 0044 741 494 2508 / 0047 9510 7622