யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும் கடந்த 27 ஆண்டுகளாக நோர்வே, ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சதானந்தன் குணபூரணி அவர்கள் 23.05.2023ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவர் அமரர் சதானந்தனின் அன்பு மனைவியும், அமரர் சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் புதல்வியும், அமரர் சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும், வரேந்திரன் (ஜேர்மனி), சுமதி (கனடா), மாலதி (பிரான்ஸ்), விஜேந்திரன் (சாந்தக்கண்ணா – நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும், தயாநிதி, திருலோகநாதன், உருத்திரேஸ்வரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், பௌர்ணிகா, மதுஜா, சிந்துஜா, அனுசா, ஆத்தியா, அபிஷா, நிரோஜன், சனோஜன், சேந்தன், வித்தகி ஆகியோரின் நேசம்நிறை பேத்தியாரும், லோகேஷ்வரன் சுப்பையா அவர்களின் அருமை அண்ணியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 25.05.2023ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 05:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை Ulleval sykehus Kapellet Bygg 25 [Kirkeveien 166, 0450 Oslo] ல் வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகள் 31.05.2023ஆம் திகதி புதன்கிழமை காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரையும், மலர் வணக்கம் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரையும் Ostre gravlund, Store kapell [Tvetenveien 7, 0661 Oslo] ல் நடைபெற்று, தகனக்கிரிகை மதியம் 12:00 மணிக்கு Alfaset Gravlund [Nedre Kalbakkvei 99, 1081 Oslo] ல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.