அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பா என அன்பாக அழைக்கப்படும் செல்வி. தனநாயகி சபாரத்தினம் அவர்கள் 01.11.2019 வெள்ளிக்கிழமை அகாலமரணம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற ஆசிரியர் சபாரத்தினம் இரத்தினம்மா அவர்களின் அன்பு மகளும், விஜயரத்தினம் (பொறியியலாளர், சவுதி அரேபியா) காலஞ்சென்ற மலர் என அழைக்கப்பட்ட சபாநாயகி மற்றும், சிவநாயகி, லோகநாயகி (படவரைஞரும், யாழ். வர்த்தக தொழிலாளர் கூட்டுறவு சங்க கணக்காளர்) ஆகியோரின் அன்பு சகோதரியும், பத்மராசா, இந்திராணி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும், தர்மகுலசிங்கம், சிவநாயகி, தவத்துரை ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற செல்லம்மாவின் பெறாமகளும், தேவராசா, வனராட்சியம்மா ஆகியோரின் மருமகளும், நவீன், ஹரிணி, ஸ்கந்தராஜா, மயூரன், சுகிர்தராஜ் ஆகியோரின் மாமியும், காலஞ்சென்ற ஹரிஷன், மதுராங்கினி ஆகியோரின் பெரிய தாயும், மாலதி, தர்சினி, பவனுஷா, கிருஷாந், ஜவாஹரி ஆகியோரின் சிறிய தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல. 203/2, கண்டி வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 03.00 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.