அரியாலையை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சோதிலிங்கம் அவர்கள் 13.12.2021ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நோர்வேயில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், தவமலர் என்பவரின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் பூமலக்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும், கஜானன், டிலக்ஷன், கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், அமரர். பஞ்சலிங்கம் (முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர், யாழ். கல்வி வலயம்) நாகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், தியாகலிங்கம், சரஸ்வதி, கோசலாதேவி, யோகாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கமலாதேவி, பேரம்பலம், யோகம்மா, சந்திராவதி, அமரர் செல்வராசா, சிவபாலசிங்கம் (துரை) , குணதாசன், புஸ்பா, இராமசந்திரன், மலர், காண்டீபன், நவமலர், நகுலன் ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.12.2021ஆம் திகதி வியாழக்கிழமை நோர்வேயில் இடம்பெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
கலைமகள் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.