அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்தம்மா சின்னத்துரை அவர்கள் கடந்த 07.08.2023ஆம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு செல்லாச்சி தம்பதியரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்துரை (கிளி) அவர்களின் அன்பு மனைவியும், விமலராணி சிவம் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) திலகராணி, மகேந்திரன், கமலாம்பிகை, தெய்வேந்திரன் (தெய்வா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சிவம், கணேசன், செந்தூர்செல்வி மற்றும் வசந்தாதேவி, ஜெயராசா (ஜெயா) அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கனகம்மா, Dr. தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கமலாதேவி, குணமணிதேவி, மேசன் பொன்னையா, முத்தம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியேந்திரா (சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவன்) டர்சிகா (சுண்டிக்குளி மகளீர் கல்லூரி பளைய மாணவி, சம்பத் வங்கி உத்தியோகத்தர்) நோர்வே வாழ் கீர்த்திகா, சந்துஜன், கபிசன், நிதூசன், அனிக்கா, சபேசன், புவனேசன், ரதீசன், யதூசன், அகிசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், ஜஸ்விந்தின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10.08.2023ஆம் திகதி வியாழக்கிழமை அன்று 10/2, நடுத்தெரு லேன், அரியாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பி.ப. 04:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்: குடும்பத்தினர்.