அரியாலை AAC பழைய மாணவர்கள் அரியாலை திருமகள் சனசமூக நிலையத்துடன் இணைந்து நடாத்தும் இலவசவசமான கலைப்பயிற்சி வகுப்புகளும், வழிகாட்டலும் நிகழ்ச்சி எதிர்வரும் 28.01.2021ஆம் திகதி வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்னு காலை 08.07 மணிக்கு அரியாலை திருமகள் சனசமூக நிலைய கலை அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் எமது பண்பாட்டு கலை ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும், கலைகளை வளர்க்கும் நோக்கத்திற்காகவும் சிறுகதை, கவிதை, கதை, நாவல், குறுநாவல், சிறுவர் கதை, தொடர் கதை, நாடகம், பாடலாக்கம், விவாதம், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைகள் தொடர்பாக இலவசமாக பயிற்சி வகுப்புகளும், வழிகாட்டல் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
தலைமை –
திரு. கு. பிரதீபன் (ஆசிரியர், யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண ம. வி.)
பிரதம விருந்தினர் –
திருமதி. மாலினி அயந்தன் (செய்தி ஆசிரியர், டான் செய்திகள்)
சிறப்பு விருந்தினர்கள் –
திரு. Y. தயாளன் (அதிபர், தலைவர், திருமகள் சனசமூக நிலையம்)
திரு. ந. சுதேஸ்குமார் (செயலாளர், அரியாலை திருமகள் சன சமூக நிலையம், சர்வதேச கரப்பாந்தாட்ட நடுவர்)
வளவாளர் –
எழுத்தாளர், கவிஞர். திரு. மாவை கஜேந்திரன் (முகமையாளர் வலம்புரி பத்திரிகை)
(பங்குகொள்ள விரும்புவோர் 26.01.2021ஆம் திகதிக்கு முன்னர் aactrustariyalai@gmail.com என்ன மின்னஞ்சல் ஊடாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்)