அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் பொதுச்சபை கூட்டம் கடந்த 07.04.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு தலைவர். Dr. ம. அருங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 22.05.2022ஆம் திகதி நடைபெற்ற பொதுச்சபைக்கூட்ட அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான (01.04.2022 – 31.03.2024) செயற்பாட்டு அறிக்கை, நிதியறிக்கை மற்றும் கணக்காய்வாளர் அறிக்கை ஆகியன சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய நிர்வாக சபை தெரிவு தொடர்பாக, பொதுச்சபையின் ஒருமித்த கட்டாய ஆலோசனைக்கு அமையவும், நிர்வாக உறுப்பினர்களின் தனிப்பட்ட வேலைப்பளு கோரிக்கைகளுக்கு அமையவும் முன்னைய நிர்வாக உறுப்பினர்களே நிர்வாகத்தில் ஈடுபடுவது எனவும் அவர்கள் தமக்குள் பதவிநிலையை மாற்றுவது எனவும் கடந்த கால நிர்வாக சபை கூட்டங்களில் மூன்று கூட்டத்திற்கு மேல் சமுகம் தராதவர்களை அடையாளம் கண்டு அவர்களை விடுத்து புதியவர்களை இணைக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு பின்வருமாறு புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் – Dr. ம. அருங்கரன்
கௌரவ செயலாளர் – திரு. ஜெ. சதீசன்
பொருளாளர் – திரு. ஆறுமுகதாசன்
உப தலைவர் – திரு. ஆ. பரமராஜா
உப செயலாளர் – திரு. ஜெ. ஜசிந்தன்
உப பொருளாளர் – திரு. ம. மதன்
அறநெறி இணைப்பாளர் – திரு. ஏ. காந்தயுபன்
பொருட் காப்பாளர் – திரு. வி. சயந்தன்
நிர்வாக உறுப்பினர் – 1 – திரு. ர. சஞ்சீவன்
நிர்வாக உறுப்பினர் – 2 – செல்வி. கு. நாமகள்
நிர்வாக உறுப்பினர் – 3 – திரு. இ. ஜயூரன்
போசகர் – திரு. அ. உபயசேகரம்
கணக்காய்வாளர் – திரு. சு. சண்முகரட்ணம்
இத்துடன் கூட்டம் காலை 10.00 மணியளவில் செயலாளரின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.