அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சமூகநல நோக்கின் அடிப்படையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலை நோயாளர்கள், பராமரிப்பாளர்கள் ,ஊழியர்கள் போன்றோருக்கு தேவையான சுமார் 85 உணவுப்பொதிகளை இன்று (22.03.2020) மாலை 06.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளனர்.
மேலும், ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்த உணவு இன்றி பாதிக்கப்பட்டிருப்போர் எவரும் இருப்பின், அவர்கள் தொடர்பாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தெரியப்படுத்துமிடத்து அவர்களுக்கான உணவுகளை வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள் –
077 778 2192
077 743 0910
077 841 3872
Please follow and like us: