COVID – 19 நோய்த்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முதியோர், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள் போன்ற 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கிராமசேவகர், பிரதேச செயலாளர் ஆகியோரின் தகவல் அடிப்படையில் ஐந்தாவது நாளாகவும் இன்று (26.03.2020) அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தினரால் மதிய உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டது.
இவ் நிவாரணமானது கிழக்கு அரியாலை, பூம்புகார், வேளாங்கண்ணி தோட்டம், நாவலடி, முள்ளி, அரியாலை சந்தி, இளையதம்பி வீதி, பொன்னம்பலம் வீதி, குகன் வீதி, ஆட்காட்டி ஒழுங்கை, அருளம்பலம் ஒழுங்கை, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, புகையிரத வீதி, நடுத்தெரு ஒழுங்கை, மலர்மகள் வீதி, சாஸ்திரியார் வீதி, திருமகள் வீதி, சுப்பிரமணியம் ஒழுங்கை, ஆனந்தன் வடலி வீதி, பூமகள் வீதி, கலைமகள் வீதி, கண்டி வீதி, 4 ஆம் ஒழுங்கை, கனகரத்தினம் வீதி ஆகிய இடங்களுக்கு மதிய உணவாக 270 இறாத்தல் பாண் மற்றும் 12 உணவுப் பொதி ஆகியன வழங்கப்பட்டது.
இவ் நிவாரணப்பணியானது தொடர்ந்தும் நடைபெறும் எனவும் தொரிவிக்கப்பட்டுள்ளது.