அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் தொடர்பான பொதுமக்கள் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 19.12.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட (50) அரியாலை பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இறைவணக்கத்தை தொடர்ந்து கூட்ட ஒருங்கிணைப்பாளர் சார்பாக திரு. து. துஷ்யேந்திரன் அவர்களின் உரை நடைபெற்றது. அதில் எமது சித்துப்பாத்தி இந்து மயானம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து விடயங்களும் விபரமாக கூறப்பட்டது. தொடர்ந்து அனைவரினதும் கருத்துக்கள், ஆலோசனைகள், முன்மொழிவுகள் பெறப்பட்டு அதற்கிணங்க புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு அவ் நிர்வாகம் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டு அனைவரையும் ஒன்றிணைத்து எமது மயான சபை அமைப்பு விதிகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
புதிய நிர்வாக சபை.
தலைவர் : திரு. அ. தெய்வேந்திரன்.
கௌரவ செயலாளர் : திரு. து. துஷ்யேந்திரன்.
பொருளாளர் : திரு. த. பிரணவராவ்.
உப தலைவர் : திரு. த. தர்மேந்திரன்.
உப செயலாளர் : திரு. ஜெ. ஜசிந்தன்.
நிர்வாக உறுப்பினர்கள் :
- திரு. சந்திரகாந்.
- திரு. வை. கிருபாகரன்.
- திரு. நாகேந்திரதாஸ்.
- திரு. நி. கவிந்தன்.
- திரு. ஸ்ரீகரன்.
- திரு. பத்மமுரளி.
- திரு. பாரதிதாசன்.
- திரு. கமல்தாஸ்.
- திருமதி. ஸ்ரீகாந்தி.
- திரு. தேவதாசன்.