நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கும் உதவும் முகமாக அரியாலை சுதேசியம் சார்பாக இன்றையதினம் (25.03.2020) இரண்டு அணிகளாக அரியாலையின் சில பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அண்ணளவாக ரூபா 1,750.00 பெறுமதியான உலர் உணவுகள் உள்ளடங்கிய 83 பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இவ் நிவாரணமானது யாழ் மாவட்டத்தின் நல்லூர், யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் சிபாரிசு செய்து வழங்கிய வறிய மக்களின் விபரப்பட்டியலை மூலமாகக்கொண்டு சுதேசிய நிவாரணப்பணி குழுவினரால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று உரியவர்களின் வறிய நிலமையை உறுதிப்படுத்தி அவர்களுக்குகான இவ் உலர் உணவு பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், ஏனைய பிரதேசங்களுக்குரிய நிவாரணப்பணி நாளைய தினமும் தொடரவுள்ளது.