நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கும் அரியாலை சுதேசியம் சார்பாக உதவும் முகமாக அரியாலையில் உள்ள பெரும்பாலான வறிய மக்கள் வாழும் வீடுகளுக்கு அரியாலை சுதேசிய நிவாரணக்குழுவினர் நேரடியாக விஜயம் செய்து உலர் உணவுகள் உள்ளடங்கிய பொதிகளை இலவசமாக வழங்கியுள்ளனர்.
இவ் நிவாரணமானது யாழ் மாவட்டத்தின் நல்லூர், யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் சிபாரிசு செய்து வழங்கிய வறிய மக்களின் விபரப்பட்டியலை மூலமாகக்கொண்டு சுதேசிய நிவாரணப்பணி குழுவினரால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று உரியவர்களின் வறிய நிலமையை உறுதிப்படுத்தி அவர்களுக்குகான நிவாரண உலர் உணவு பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இவ் நிவாரணப்பணியானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன.
திகதி | வழங்கப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை |
25.03.2020 | 83 |
26.03.2020 | 117 |
27.03.2020 | 47 |
29.03.2020 | 05 |
30.03.2020 | 49 |
31.03.2020 | 81 |
01.04.2020 | 37 |
02.04.2020 | 47 |
03.04.2020 | 29 |
இதுவரை 495 உலர் உணவு பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.