அரியாலையில் உள்ள பில்தெனியா தேவாலயமானது சட்டவிரோதமாக வயல் காணியை நிரப்பி கட்டப்பட்ட தேவாலயம் எனவும், இதற்கு அயலவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கமநல சேவை ஆணையகம் மற்றும் நல்லூர் பிரதேச சபை போன்ற அரச துறையில் பணிபுரியும் அரச அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அவ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் சிவசேனை அமைப்பினை சேர்ந்த சச்சிதானந்தன் அவர்கள் இன்றைய தினம் (28.04.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாகாணத்தில் எத்தனை சபைகள் உள்ளன? அந்த சபைகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது? அந்த பணத்தை அவர்கள் எவ்வாறு செலவு செய்கின்றார்கள்? இத்தகைய விபரங்களை விசாரணை செய்ய விசாரணை ஆணைக்குழு ஒன்றை அரசாங்கம் நியமிக்க வேண்டும் எனவும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.