அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பவானி அவர்கள் 05.02.2021ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் கந்தையா யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், கந்தசாமியின் (இளைப்பாறிய கட்டட திணைக்கள பட வரைஞர்) பாசமிகு மனைவியும், சயந்தன் (ஆசிரியர், வேம்படி மகளீர் கல்லூரி) கௌரி (நடன ஆசிரியர், லண்டன்) பிருந்தா (ஆசிரியர், நாவற்குழி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பிருந்தாமலர் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்) ஜனார்த்தனன் (லண்டன்) உமாசெல்வன் (விரிவுரையாளர் – SLIIT) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற தவராசா, சரோஜாதேவி, சிவராசா யோகராணி, சாந்தினி, திரிலோஜினி, ஆனந்தராசா, அருலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தவமணி, லோகஞானம், புஸ்பாதேவி, குணரட்ணம், குணபாலசிங்கம், சூரியகுமார், சுபதா, சண்முகலிங்கம், வரதராசா, சிவபாலசிங்கம், நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், அபிராமி, மீனாட்சி, ஸ்ரீகரி, ஹனுஸ்தரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல. 40/1, கலைமகள் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக 07.02.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு – 021 221 1225, 077 830 1687.