அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர் S. C. செல்வராசா அவர்கள் 23.10.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா – பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற வசந்தகுமாரியின் ஆருயிர் கணவரும், பாதுஷா, சஞ்சீவன் (வீதி அபிவிருத்தி அதிகாரசபை, யாழ்ப்பாணம்), சங்கீரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீகரன் (Metropolitan PVT. Ltd) கிருஸ்ணஜெயந்தினி (மாவட்ட நீதிமன்றம், மல்லாகம்) அரவிந்தன் (சரவணன் Hard Ware) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கமலாதேவி தியாகராசா (ஓய்வுபெற்ற மின்சாரசபை உத்தியோகத்தர்) சோதிராசா (பிரான்ஸ்) சத்தியசீலன் ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற துரைரட்ணம், பிரணவநாதன், இலங்கேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி (கமலேஸ்) செல்வராஜா (இங்கிலாந்து) தேம்பாமலர் பாசுபதன் (பத்மா) வனஜா உருத்திரேஸ்வரன் (இங்கிலாந்து) சந்திரபவானி (சாந்தி) சகுணவதி ஆகியோரின் மைத்துனரும், ஜகிர்த்தன், அவந்திக்கா, டிலக்ஸா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.10.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இல: 847, நாவலர் வீதி, அரியாலையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.