அமரர். விஸ்வநாதன் பாலரூபன்
(தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாட ஆசிரியர், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி)
அரியாலையை பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் பாலரூபன் அவர்கள் 07.02.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகாலமரணம் அடைந்துவிட்டார்.
அன்னார், திரு. திருமதி. விஸ்வநாதன் (ஓய்வுபெற்ற கணித ஆசிரியர்) தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், திருமதி. மாதினி பாலரூபன் (ஆசிரியர், யாழ். இராமநாதன் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும், செல்வி. குகசாயினி பாலரூபன், செல்வன். பாலரூபன் கவிசயன் ஆகியோரின் அன்பு தந்தையும், திருமதி. பவிதா சுகந்தன் (லண்டன்) திரு. பவநீதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரனும், திரு. சுகந்தன் (லண்டன்) திருமதி. சர்மினி பவநீதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் செல்வன். மதுஷன், செல்வி. கயலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், செல்வன் மிருஷ், செல்வி. ஜீவிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.02.2021ஆம் திகதி திங்கட்கிழமை லவ்வேன், உடுவில், சுன்னாகம் என்னும் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காகநண்பகல் 02.00 மணியளவில் பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: கோகுலன் (மைத்துனர்)
தொடர்புகளுக்கு – 077 176 6257