நயினாதீவை பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 25.06.2020ஆம் திகதி வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. வைத்திலிங்கம் – கண்மணி தம்பதியினரின் மகனும், ஸ்ரீரங்ககுமாரியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான கௌசிகன், இதயராஜ் (சின்னத்தம்பி) மற்றும் ஜெயச்சந்திரன் (குட்டி – கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், தனுசியாவின் மாமனாரும், ஜெய்டனின் அன்பு பேரனும், திருமதி. திருநாவுக்கரசு, நாகேஸ்வரியின் சகோதரனும், லோகேஸ்வரி, கதிர்காமநாதன், தவராணி, றங்கேஸ்வரி, தெய்வேந்திரம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், அமரர்களான தேசிகநாதன், முருகசேகரம் மற்றும் தவகுமாரி, மோகனகுமாரி, பங்கயகுமாரி, தனகுமாரி, லோகேஸ்வரி, சந்திரரதி, சுபோதினி, துரைசிங்கம் மற்றும் அமரர்களான குணராசா, சோதிராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.06.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல. 68/2, இலந்தைக்குளம் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பி.ப 03.00 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.