அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (23.06.2019) காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நல்லூர் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி. நகுலா ரூபேந்திரராசா அவர்களும், J/96 – அரியாலை மத்தி தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குரிய கிராம சேவகர் திரு. ஜே. லினேஸ் அவர்களும் மற்றும் ஐம்பத்துஇரண்டு (52) பொதுச்சபை அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
தலைவர் வைத்திய கலாநிதி. ம. அருங்கரன் அவர்கள் தனது தலைமையுரையில் கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கு வணக்கம் தெரிவித்ததுடன், மன்றத்தினை பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மன்றத்தின் தேவைகள் தொடர்பாகவும், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி. நகுலா ரூபேந்திரராசா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இம்மன்றமானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் மிகவும் சிறப்பான செயற்பாட்டுகளை செய்துவருகின்றமையை செயற்பாட்டு அறிக்கையின் ஊடாக அறியக்கூடியதாக உள்ளதாகவும், மன்றத்தினை பதிவுசெய்வது தொடர்பாக தேவையான ஆவணங்கள் அனைத்தும் உள்ளமையால் அவை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்து முடியும் எனவும் கருத்து தெரிவித்தார்.
அமைப்பு விதிகளின் வரைபு பரிசீலிக்கப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுச்சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
இத்துடன் பொதுக்கூட்டம் பகல் 12.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.