நாட்டில் நிலவும் தொடர் பயணத்டையால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு அரியாலை சனசமூக நிலையத்தினால் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ் நிவாரணமானது இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்டத்தில் யாழ். மடத்தடி முலவையை சேர்ந்த 40 குடும்பங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் அரியாலையை சேர்ந்த 220 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 260 குடும்பங்களுக்கு தலா ரூபா. 1500.00 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமது நிவாரணப்பணிக்காக நிதியுதவி வழங்கிய உள்ளூர் மற்றும் வெளியூர் உறவுகளுக்கு தமது நிர்வாகம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.
Please follow and like us: