இக்கூட்டத்திற்கு முப்பதிற்கும் மேற்பட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் பங்குகொண்டதுடன் நல்லூர் பிரதேச சபை தவிசாளரும் மற்றும் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் இறுதியாக தெரிவுசெய்யப்பட்ட மயான நிர்வாக சபையே தொடர்ந்து இயங்கும் என ஏகமனதாக தெரிவிக்கப்பட்டதுடன், நல்லூர் பிரதேச சபையை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நல்லூர் பிரதேச சபையின் மயான இணைப்பாளர்களாக செயற்படவும் இடமளிக்கப்பட்டது.
இம்மயானமானது அரியாலைக்கு சொந்தமான தனி நபர்களால் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட தனியார் மயானம் எனவும், இவற்றுக்கான ஆதாரங்களை எம்மால் வழங்க முடியும் எனவும், அந்தவகையில் எமது மயானத்தை தனியார் மயானமாகவே கருத வேண்டும் எனவும், இம்மயானம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபைக்கு மேற்பார்வை செய்யும் உரிமை தவிர்ந்த வேறு எந்தவித உரிமையும் இல்லை எனவும் பொதுச்சபையால் தெரிவிக்கப்பட்டது.
மயானத்தின் நன்மை கருதி மயானத்தில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டதாகவும், இதற்கு புதிதாக ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்படுவார் எனவும், மயான நிர்வாக சபையின் கட்டுப்பாட்டிற்கு உட்படும் வகையில் காவலாளி செயற்படுவார் எனவும் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
இத்துடன் கூட்டம் மதியம் 12.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.