ஐக்கியராச்சிய அரியாலை சமூக அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும், அரியாலை சித்துபாத்தி இந்துமயானம் புனரமைப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டமும் கடந்த 03.11.2019ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த பத்து வருடங்களுக்கான நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவை ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்கத்தின் தற்போதைய மீதித்தொகை வங்கியில் £ 3840 (இலங்கை ரூபாய் பொறுமதியில் 9 இலட்சம்) உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் நிதியறிக்கை சங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து திரு. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இயங்கும் அரியாலை சித்துபாத்தி இந்துமயான புனரமைப்பு தொடர்பாக ஆராயப்பட்டது. அதில் இன்றைய சூழ்நிலையில் இப்புனரமைப்பு பணி அவசியமானதாக கருதி இப்புனரமைப்புக்காக சங்கத்தின் வைப்புப்பணத்தை முழுமையாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இப்புனரமைப்பு பணிகளுக்கான உத்தேச மதிப்பீடு ரூபா 35 இலட்சம்.
(இப்புனரமைப்பு பணிகளுக்காக கடந்த காலங்களில் சங்கத்தின் நிதியிலிருந்து ரூபா 10 இலட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)
அரியாலைவாழ் அனைத்து மக்களுக்குமான இறுதிமரியாதை நிகழ்வு இடம்பெறும் இடமான இம்மயான புனரமைப்பு திட்டத்திற்கு அரியாலையூர் புலம்பெயர்வாழ் மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாகவோ அல்லது திரு. ரங்கநாதன் அவர்களின் ஊடாகவோ தொடர்புகொண்டு வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்கப்பட்டனர்.
நாம் பிறந்து வளர்ந்த நம் ஊரில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தி பணிகள் அதிகம் உள்ளன. அவற்றை நம் எதிர்கால சந்ததியினர் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, நாம் வாழும் காலத்திலேயே நமது மண்ணிற்கும், நமது ஊரிற்கும் தேவையான அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கியராச்சிய அரியாலை சமூக அபிவிருத்தி சங்கத்தில் இணைந்து தங்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குமாறு கேட்கப்படுகின்றனர்,
சங்கத்தின் தொடர்புகளுக்கு –
M.P.நாதன், ராஜ்பால், பவான் , ராஐரூபன்.