அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு பெருவிழா இன்றைய தினம் (22.08.2019) வெகு கோலாகலமாக ஆரம்பமானது.
இவ்விழாவின் முதலாம் நாள் நிகழ்வாகிய இன்றையதினம் (22.08.2019) அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான முன்றலில் 100 தேங்காய்கள் உடைக்கப்பட்டு தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் நிலையத்தின் இலட்சனை ஊர்வலமாக நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து வரவேற்பு உரை, வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் விழா இனிதே ஆரம்பமானது.
இன்றைய விழாவின் முக்கிய நிகழ்வாகிய ”நினைவுச்சின்னம் திறக்கும் வைபவமும், நுழைவாயில்கள் திறக்கும் வைபவமும்” இனிதே நடைபெற்றது.
தொடர்ந்து தலைவர் உரை, விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்று மேலும், நடனம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிள் சிறப்பாக நடைபெற்று நன்றியுரையுடன் இன்றைய விழா இனிதே நிறைவடைந்தது.
Please follow and like us: