மகா சிவராத்திரியை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (01.03.2022) அரியாலையிலிருந்து அண்ணளவாக 325 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிலாபம் முன்னேஸ்வர ஆலய தரிசனத்திற்காக அரியாலையை சேர்ந்த எழுபது (70) சிவனடியார்களுக்கும் மேலான அடியார்களை அழைத்துச்சென்று திரும்பியுள்ளார்கள்.
இவ் ஆலய தரிசனத்திற்கான போக்குவரத்து செலவினை திரு. ந. நேதாஜி (நோர்வே) அவர்களும் அனைத்து அடியார்களுக்குமான போசன செலவினை திரு. அ. பரமராஜா அர்களும் அனுசரனையாக வழங்கியுள்ளார்கள்.
Please follow and like us: