102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது பத்தாவது நாளாக இன்றையதினமும் (20.06.2021) சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிவாரணப்பணியின்போது J/90, J/94, J/96 ஆகிய கிராம சேவகர் பிரிவைவுகளைச்சேர்ந்த பகுதியளவிலான 173 குடும்பங்களுக்கு சுமார் ரூபா. 1,600.00 பெறுமதியான 173 உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
அரியாலையின் ஏனைய கிராமசேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கான நிவாரணமானது தொடர்ந்துவரும் நாட்களில் வழங்கப்படும் என சுதேசிய நிவாரணக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Please follow and like us: